
Title | : | Box கதைப்புத்தகம் |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
ISBN-10 | : | 9788192971520 |
Language | : | Tamil |
Format Type | : | Paperback |
Number of Pages | : | 252 |
Publication | : | First published July 1, 2015 |
Box கதைப்புத்தகம் Reviews
-
Box novel written by Shobasakthi is good. It deals with the pains of Tamils suffered in Srilanka during and after the war time. It does not fail to register the violence of LTTE too. Since author was a former LTTE child fighter, the value of the book increases and the incidents covered in the book get more authenticity. The book is close to the history when author explains in first person at final chapters. The dramatic change of the deaf and dumb boy is an artificial one. No idea if it's an true indecent. The excellent language of the author what we see in his short stories is missing here in the novel. Many novels in this genre may give some light on the plight of Tamils in Srilanka after war. This novel may be regarded as the starting point of that and this is the importance of the novel too. On the other hand, this novel gives a small account of early Christianity in Srilanka.
-
நீங்கள் இலங்கையில் உள்நாட்டுப்போர் நடைபெற்ற காலப்பகுதிகளில் அங்கு இருந்திருப்பீர்களானால் அல்லது அவ் யுத்தம் பற்றிய தகவல்களைக் கேள்விப்பட்டிருப்பீர்களானால் "அவங்கள் box அடிச்சிட்டாங்களாம்" என்ற வசனத்தையும் அதன் அர்த்தத்தையும் இலகுவாக உங்களால் புரிந்துகொள்ள முடியும். இதை புரிந்துகொள்ளாமல் விட்டாலும் கூட ஒன்றும் பெரிய தப்பில்லை. ஏனென்றால், இங்கு இலங்கை யுத்தம் பற்றிக் கூக்குரலிடுகின்ற பலருக்கே பல விடயங்கள் தெரியாது. சரி கதைக்கு வருவோம். அந்த 'box அடித்தல்' தான் இந் நாவலின் கரு. ஆனால் இது யுத்த காலத்தில் அடிக்கப்பட்ட box பற்றியதல்ல, யுத்தமெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது என்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட மே 2009ற்குப் பிறகு நம் மக்களைச் சுற்றி அடிக்கப்பட்ட boxஐப் பற்றியது.
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வருகின்ற ‘நிர்வாணம்’ என்ற சொல்லால் கதையின் மூலக்கரு நாவலெங்கும் கடத்தப்படுகிறது. -
நான் வாசிக்கும் ஷோபாசக்தியின் 4வது நாவல் இது. போராட்டம் போராட்டத்திற்கு பின்பான காலம் போன்றவற்றின் இனனொரு முகத்தை இதன் மூலமாக தான் பாரக்கிறேன். ஒவ்வொரு புத்தகமும் ஒருதொகை கனத்தை மனதில் ஏற்றினாலும் விரும்பி ஏற்றுக்கொள்கின்றேன்.
-
கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது.
ஒரு சிறிய கிராமம், சில கிராமவாசிகள், ஒரு சிறுவன் - அடிப்படையா வைத்து நாட்டில் நடந்த ஆயுத போராட்டம். அதன் சிதைவுகள், இயலாமை, ஏக்கம், தியாகம், சாதி, சமூக ஏற்றத்தாழ்வு என சித்தரிக்க பட்டுஇருக்கிறது. ஈழ தமிழ் சமூக அமைப்பு தெரிய இந்த புத்தகத்தை வாசிக்கலாம். -
“..ஆனால் இந்த நிழல் சித்திரத்தைவிட போரின் உண்மைச் சித்திரம் கடுமையானது. அந்தச் சித்திரம் இந்தத் தேசத்தின் மனச்சாட்சியின் வீழ்ச்சி” - Box கதைப்புத்தகத்திலிருந்து.
நாவல் வெளியான சமயத்தில் அரசியல் காரணங்களுக்காக நாவல் மீதும் ஷோபா சக்தியின் மீதும் வெறுப்பைக் கக்கிய சிலருக்கு தகுந்த பதிலாய் நாவலின் இந்த வரிகளை எடுத்துகொள்கிறேன்.
நாவலின் கதை குறித்தும் அதன் வடிவ நேர்த்தி(structure) குறித்தும் பலரும் கூறியிருக்கிறார்கள் நான் தனியே ஏதும் சொல்லத் தேவையில்லை அவ்வளவு அட்டகாசமானது. ஷோபாவின் மற்றைய நாவல்களைக்காட்டிலும் இந்த நாவல் அளவில்(size) சற்று சிறியதாக இருப்பதுவும், அட்டைப்படத்திலுள்ள பின்னப்பட்ட நிலையிலிருக்கும் கால்களும் நுட்பமாய் எனக்கு Box’ஐக் காண்பித்து அதன் வடிவமைப்பிலும்(design) ஒரு தனித்தன்மையைப் பெற்றுவிட்டது. -
I love this novel.. I feel it is better than கொரில்லா &"ம்"
-
ஷோபாசக்தியின் கதை சொல்லும் விதம் ஒரு சில எழுத்தாளர்களுக்கே கை கூடி வரும். சிறந்த புத்தகம். முகத்தில் அறையும் உண்மையில் சில நாட்களுக்கு தூக்கத்தை கெடுத்து விடும்.